உள்ளூர் செய்திகள்

அறிவியல் துளிகள்

1. அமெரிக்காவின் அலபாமா மாகாணக் கடற்கரையில் கடல் ஆமையின் முழு ஓடு ஒன்று தொல்லெச்சமாகக் கண்டறியப்பட்டது. இது 3.2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆமைகள் இறந்த பின், ஓட்டைப் பிணைத்து வைக்கும் கொலாஜன் புரதம் அழிந்துவிடும் என்பதால், முழு ஓடு தொல்லெச்சமாகக் கிடைப்பது மிகவும் அரிது. 2. அர்ஜென்டினா நாட்டின் பெர்மஜோ ஆற்றுப் படுகையில் ஒரு புதிய கெளுத்தி மீனை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2 அங்குல நீளமும், சிறிய கண்களும் கொண்ட இந்த மீன்களுக்குப் பற்கள் இல்லை. இதற்கு 'எர்ன்ஸ்டிச்சிஸ் கசாலினுவோய்' என்ற விலங்கியல் பெயர் இடப்பட்டுள்ளது. 3. பூமியிலிருந்து 240 ஒளியாண்டுகள் தொலைவில், சிம்ம ராசி மண்டலத்தில் அமைந்துள்ளது TOI-6894 நட்சத்திரம். இது நம் சூரியனை விடச் சிறியது. சனிக்கோளை விட மிகப் பெரிய கோள் ஒன்று இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வருவதை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு TOI-6894b என்று பெயரிட்டுள்ளனர். 4. மத்திய சீனாவில் பூமியில் புதைந்திருந்த டைனோசர் முட்டைகளைத் தொல்லி யலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இவை, 8.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 5. நாள்பட்ட துாக்க மின்மையால் அவதிப்படுபவர்களுக்கு முதுமையில் அல்சைமர் முதலிய மறதி நோய்கள் ஏற்படு வதற்கான வாய்ப்பு மற்றவர் களை விட 40 சதவீதம் அதிகம் என ்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !