1. ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், தொடர்ந்து இசையைக் கேட்பதால் வயதான காலத்தில் மறதி ஏற்படும் வாய்ப்பு 39 சதவீதம் குறைவது தெரிய வந்துள்ளது.
2. கிவி பழம், கேழ்வரகு, அதிக தாதுக்கள் நிறைந்த தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வாக அமை யும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
3. க்ளைசி 251 நட்சத்திரம், பூமியிலிருந்து 18 ஒளியாண்டுகள் தொலைவில், மிதுன ராசி மண்டலத்தில் அமைந்துள்ளது. பூமியைப் போன்ற இரண்டு கிரகங்கள் இதைச் சுற்றி வருவதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
4. மின் கம்பங்கள் வழக்கமான வடிவங்களில் இருந்தால் ரசிக்கும்படியாக இல்லை என்பதால் விலங்கு, பறவைகளை போல் ஆஸ்திரிய நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் வடிவமைத்து உள்ளனர். இது, உலகெங்கும் வரவேற்பு பெற்றுள்ளது.
5. பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் உடைந்து, அவற்றின் பாகங்கள் விண்வெளியில் மிதந்து கொண்டு உள்ளன. இவை, புதிதாக நிலை நிறுத்தப்படும் செயற்கைக் கோள்கள் மீது மோதக் கூடும். எனவே, இவற்றை காப்பதற்கான புதிய வலிமையான கவசத்தை, 'அடாமிக் 6' எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.