அறிவியல் துளிகள்
1. வவ்வால்களின் மூளை செயல்பாடுகளை, கம்பியில்லா முறையில் பதிவுசெய்து ஆராய்ந்தனர் கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள். ஆய்வின்படி, வவ்வால் மூளையில் நியூரான்கள் ஒரு சேர்ந்திசைக் குழு போலச் செயல்பட்டு, அனுபவங்களை பதிவு செய்கின்றன. இதுவே, வவ்வால்களின் நீண்ட கால நினைவாற்றலுக்கு அடிப்படை. 2. தைவான் தேசிய பல்கலை ஆராய்ச்சி யாளர்கள், நானோ இழைகள், உணரிகள், ஸ்டெம்செல் போன்ற வற்றைக் கொண்ட 'பேண்டேஜ்'களை உருவாக்கி உள்ளனர். இவை தொற்று களைக் கட்டுப்படுத்தி, புதிய திசுக்களை மீண்டும் உருவாக்கி, காயங்களை ஆற்றுவதில், பழைய சிகிச்சை முறைகளை விட வேகமாகச் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது. 3. 'நாசா'வின் 'ஆர்டெமிஸ்' நிலவுப் பயணத்திற்காக, தனது ராட்சத 'ஸ்டார் ஷிப்' ராக் கெட்டை எளிதாக்கியுள்ளது 'ஸ்பேஸ்எக்ஸ்.' எரிபொருள் கலன்களை குறைத்து, சுற்றுப்பாதையை மாற்றியமைத்து, விண்வெளி வீரர்களின் பாதுகாப்புக்கும், பயண வேகத்திற்கும் 'ஸ்பேஸ்எக்ஸ்' முன்னுரிமை அளித்துள்ளது. 4. நம் உடலின் சக்தி நிலையமான, 'மைட்டோகாண்ட்ரியா'வின் மேற்பரப்பில் லுாசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இதுவே, முக்கியப் புரதங்களை பாதுகாத்து, செல்களின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று கொலோன் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 5. பூமி போலவே பாறைகள் உள்ள, 'சூப்பர்-எர்த்' கிரகத்தை விண்வெளியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'ஜிஜெ 251 சி' என்ற இது, பூமியிலிருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதுதான், நம் சூரியக் குடும்பத்திற்கு வெளியே, உயிர்களைத் தேடுவதற்கு ஏற்ற 'மிக அருகில்' உள்ள கோள்.