1. ஜெர்மனியின் பிரான்ஹோபர் நிலைய ஆராய்ச்சியாளர்கள், மரத்தின் துணைப் பொருளான 'லிக்னின்'னைக் கொண்டு சோடியம் -அயனி பேட்டரி மின்முனைகளை உருவாக்கி உள்ளனர். லித்தியம் அல்லது நிக்கல் போன்ற உலோகங்களை விட இது மலிவானது.
2. அன்டார்டிகாவில் ஏற்படும் கடலடி நிலநடுக்கங்கள், கடலடியிலிருந்து இரும்பு உள்ளிட்ட சத்துக்களை வெளியேற்றுவதாக ஸ்டான்போர்டு பல்கலை கண்டறிந்துள்ளது. இது, மிதவைத் தாவரங்களின் வளர்ச்சியை துாண்டுகின்றன. இது கடலின் உணவுச் சங்கிலி உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, வளிமண்டலத்தில் உள்ள கார்பனை உறிஞ்சும் அளவையும் மேம்படுத்துகிறது.
3. கேம்பிரிட்ஜ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் 'ரீவாய்ஸ்' (Revoice) எனும் அணி கருவியை உருவாக்கியுள்ளனர். இது பக்கவாதத்தால் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை மற்றும் நாடித்துடிப்பு சமிக்ஞைகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் அலசி, அவர்களின் பேச்சை மீண்டும் உருவாக்கித் தருகிறது.
4. கடல் மட்டம் உயரும் வேகத்தைவிட, ஆறுகளின் டெல்டா பகுதிகள் வேகமாக தாழ்ந்து மூழ்கி வருகின்றன. இதனால், கடலோர பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக் களுக்கு பெருவெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
5. வளிமண்டலத்திலிருந்து கார்பன்- டை- ஆக்சைடைப் பிரித்தெடுத்து, அதை மதிப்புமிக்க வேதிப்பொருளாக மாற்றும் புதிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நிஜ உலகச் சூழலில் செயல்படும் இக்கருவி, கார்பன் கழிவுகளைப் பயனுள்ள முறையில் கையாளுவதற்கு ஒரு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது.