தூக்கம் காட்டும் கடிகாரம்
பெரும்பாலான மக்கள், நல்ல துாக்கம் என்பது, எவ்வளவு நேரம் படுக்கையில் கிடக்கிறோம் என்பதைப் பொருத்தது என்றே நினைக்கின்றனர். ஆனால், நம் உடலுக்குள் உள்ள கடிகாரமான 'சர்காடியன் ரிதம்' எனப்படும் உயிரியல் கடிகாரத்தின்படி நமது துாக்க நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது முக்கியம் என்பதை ஆஸ்திரேலியாவின் மத்திய குவீன்ஸ்லாந்து பல்கலை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாம் போதுமான நேரம் துாங்கினாலும், துாங்கும் நேரம் தவறாக இருந்தால் அது உடல் சோர்வையும் ஆரோக்கியக் குறைபாட்டையும் ஏற்படுத்தும். இந்த 24 மணி நேர உயிரியல் கடிகாரம், விழிப்புணர்வு, ஹார்மோன் உற்பத்தி மற்றும் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. நவீன வாழ்வியல் மாற்றங்கள், நள்ளிரவில் திரை பயன்பாடு, முறையற்ற துாக்க நேரங்கள் மற்றும் செயற்கை ஒளி ஆகியவை இந்தச் சுழற்சியைக் குலைத்து, உடலைக் குழப்ப மடையச் செய்கின்றன. தினமும் ஒரே நேரத்தில் உறங்கி விழிப்பது, உடலின் கடிகாரத்தைச் சீராக்க உதவும். காலைச் சூரிய ஒளி இந்தச் சிக்னல்களை மேலும் வலுப்படுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மூன்று எளிய வழிகளைப் பரிந்துரைக்கின்றனர்: காலையில் எழுந்த வுடன் பளிச்சென்ற இயற்கை வெளிச்சத்தில் சிறிது நேரத்தை செலவிடுவது, இரவில் பிரகாசமான விளக்குகளைத் தவிர்ப்பது, மற்று ம் துாங்கும் நேரத்தை முறைப்படுத்துவது. இந்த எளிய பழக்கவழக் கங்கள் உடலின் உள் கடிகாரத்தைச் சீராக இயக்கி, ஆழ்ந்த துாக்கத்தைப் பெறவும், விழித்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் வ ழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.