நம்பிக்கை விதை!
தண்ணீரில்லைகைகழுவவேண்டியது தானாவிவசாயத்தை...?தண்ணீருக்குள்ளேயேதவமிருந்தோம்அது படைப்பியல்!தண்ணீருக்காகதவமிருக்கிறோம்இது அரசியல்!கதிர் அரிவாள் போலவாஇருக்க வேண்டும்?கழனித் தொழிலாளியின்வாழ்க்கை...கேள்விக்குறியாக...!எந்தத் தறியில்யார் நெய்தது?கந்தல் துணியாகவேஇருக்கிறதேநெசவாளர்களின்சொந்த வாழ்க்கை!எப்படி எங்கள்வாழ்க்கை மட்டும்வறண்டே கிடக்கிறது?இது...நீரிலேயே நிற்கும்சலவைத் தொழிலாளியின்சந்தேகம்?வலைகளை விடவும்சல்லடையாயிருக்கிறவாழ்க்கை மீனவர்களுக்கு!ஈவுகளைதீர்மானிப்பது யார்?உழைப்பாளிகளின்கணக்குகளின்வியர்வை விடையாகிறதுவறுமை மீதியாகிறது!தயங்காதீர்!ஓடப்பயந்த நதிகளில்கிருமிகள் வந்துகுடி இருக்கும்!உயரப் பறந்த நதிகளேஅருவிகள் என்றுபெயர் எடுக்கும்!நம்புங்கள்!கண்ணீரை விடவும்உயர்வானது வியர்வை!அதனால் தான்அழுவதைப் போல்நடிக்க முடிகிறதுவியர்ப்பதை போல்நடிக்க முடியவில்லை!முகத்திரி எரிந்தாலும்முறுவலிக்கும் விளக்குகள்!மிதிப்பட்டாலும் தம்மைஅலங்கரிக்கும் தரைகள்!பொங்கும் போதுபூ பூக்கும் பானைகள்!காயம் பட்டாலும்இனிக்கும் கரும்புகள்!நம்பச் சொல்கின்றன நம்மை!வழி பிறக்கும்...நடந்து வரும் தையாலும்!நகத்திலிடும் மையாலும்!நெல்லை ஜெயந்தா