நான் காஜல் அகர்வால் மாதிரி - கயல் ஆனந்தி கலகல
அமலா பாலுக்கு மைனா, லட்சுமி மேனனுக்கு கும்கி அமைந்தது போல் ஆனந்திக்கு கயல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பொறியாளன் படத்தில் நடித்திருந்தாலும் பெயர் பெற்றது என்னவோ கயல் படத்தில்தான். தன் தமிழ் சினிமா வருகையை வளமாக பதித்திருக்கும் ஆனந்தியை 'தினமலர்' பொங்கல்மலர் பேட்டிக்கு தொடர்பு கொண்ட போது ஆர்வமாய் அனுபவங்களை பகிர்ந்தார்...* அப்படியே நம்மூர் பொண்ணு மாதிரி இருக்கீங்களே...அப்படியா...? நான் ஐதராபாத். தெலுங்கில் மூன்று படம் நடிச்சிருக்கேன். தமிழில் பொறியாளன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கயலுக்கு ஹீரோயின் தேடுவதை அறிந்து என் போட்டோக்களை அனுப்பி 'கயல்' ஆனந்திஆனேன்.* சின்னப் பொண்ணா இருக்கீங்க... சினிமா செட் ஆகிடுச்சா?பிளஸ் 2 முடிச்சிட்டு இப்போ பி.பி.எம்., படிச்சிட்டு இருக்கேன். வாய்ப்பு வந்ததால் நடிச்சேன். ஆனால் கயல் படத்திற்கு பின் என் திட்டங்கள் மாறிடுச்சு. சினிமாவில் நிறைய உழைப்பு, திறமை இருக்குன்னு தெரிந்து கொண்டேன்.* நடிக்க வராமல் இருந்தால் எங்கே போயிருப்பீங்க?சின்ன வயசிலிருந்தே பைலட் ஆகணும்னு ஆசை. ஆனால் முடியலை. படிப்பில் நான் கெட்டி. 92 சதவீதம் மார்க் வாங்கினேன் என்றால் பாருங்கள்.* உங்களை பற்றிய பிறரின் வர்ணனை எப்படி இருக்கும்?கண் நல்லா இருக்கு, கன்னத்தின் மச்சம் நல்லா இருக்கு, சிரிச்சா ரொம்ப அழகா இருக்குன்னு... சொல்வாங்க. நான் காஜல் அகர்வால் மாதிரி இருப்பதா இயக்குனர் பிரபு சாலமன் கூட சொன்னாரு. எனக்கே ஆச்சரியமா இருக்கு.* சினிமாவில் நடிப்பு மட்டும் போதாதே...சின்ன வயதிலிருந்தே நடனம் கற்றதால் எனக்கு அந்த பிரச்னை இல்லை. கயல் படத்தில் பல கோணங்களில் அழுத அனுபவம் இருப்பதால் இனி சோக காட்சிகள் சுலபம்.* நல்லா தமிழ் பேசுறீங்களே...கயல் செட்டில் தமிழ் தான் பேசணும் என இயக்குனர் கறாரா சொல்லிட்டார். வரும் போது எனக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது. படம் முடிஞ்சு டப்பிங் நானே பேசினேன் என்றால் நம்புவீங்களா?* கயலில் கஷ்டப்பட்ட காட்சி ஏதாவது இருக்கா?கிளைமாக்ஸ் காட்சியில் 200 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சுற்றியிருக்க எனக்கு குளோசப் ஷாட் வெச்சாங்க. அனைவரது முன்னாடி நடிக்க சிரமப்பட்டேன். இயக்குனர் 'இங்கே பாரும்மா...இந்த படம் உன் லைப்... சுத்தி இருக்கிறவங்களை நினைக்காம நடி...' என்றார். 2 டேக்கில் முடித்துவிட்டேன்.* நீங்களும் 'ஊதாக் கலரும்' தோழிகளாமே...ஓ... ஸ்ரீ திவ்யாவா...? ஆமா... ஆமா... நாங்க ரெண்டு பேரும் தெலுங்கில் நடித்தோம். அதன் பின் தமிழுக்கு வந்தோம்.* என்ன மாதிரி படங்களில் நடிக்க ஆசை?நான் கிளாசிக் டான்சர். நல்ல டான்ஸ் படத்தில் நடிக்க ஆசை. அது என் கனவு.