காக்கைக்கும், குருவிக்கும் கல்யாணம்னு சொல்லி வெச்சேன்
கொங்கு நாட்டுப்பகுதியில் தை 2ம் நாள் கணு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மார்கழி நோன்பு இருக்கும் ஆண்டாள், உலக நன்மைக்காக கணு வைத்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கணு வைத்து வழிபாடு செய்வது பாரம்பரியமாக உள்ளது. புளி சாதம், எலுமிச்சம் பழ சாதம், தேங்காய், தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், சிவப்பு (குங்கும) சாதம், மஞ்சள் சாதம் என எட்டு வகை சாதங்கள் தயாரிக்கப்படும்.அதன்பின், மஞ்சள் கொம்பு, இலை, சோலை விரித்து அருகில் கரும்பு வைக்கப்படும். அதில் இயற்கைக்கு நன்றி செலுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படும். அதன்பின், பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் நலமாய் வாழ ஒவ்வொரு உருண்டையாக பிடித்து, விரிக்கப்பட்டுள்ள மஞ்சள் கொம்பு மற்றும் கரும்பு சோலையில் வைப்பர்.அப்போது பெண்கள், 'கணுப்பிடியும், காக்காபிடி வெச்சேன்கணுப்பிடியும், காக்காப்பிடியும் கலந்து நானும் பரப்பி வெச்சேன். பச்சை இலையில் நிரப்பி வெச்சேன் மஞ்சள் இலையில், விரிச்சி வெச்சேன்மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வெச்சேன்காக்கைக்கும், குருவிக்கும் கல்யாணம்னுசொல்லி வெச்சேன். கலர், கலரா சாதம் வெச்சேன் கரும்பு துண்டும் கலந்து வெச்சேன்வகை, வகையா சாதம் வெச்சேன் வாழைப்பழம் சேர்த்துவெச்சேன்அண்ணன், தம்பி குடும்பமெல்லாம் அமோகமாக வாழ அழகாய் வெச்சேன்கூட்டு, பொறியல், அவியல் வெச்சேன்கூட்டு குடும்பமாய் வாழ வெச்சேன்துாப தீபம் காட்டி, கற்பூரம் ஏத்தி கடவுளை வணங்கி வெச்சேன் ஆரத்தி எடுத்து வெச்சேன் ஆண்டவனை வேண்டி வெச்சேன் காக்கை கூட்டம் போன்று, எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க கணுப்பிடி வெச்சேன்,' என்ற பாடலை பாடி கணு பிடிப்பர்.கடவுளை வணங்கி கலவை சாதம் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. கால்நடைகளுக்கு பொங்கல் வைப்பது போன்று, பொங்கல் பண்டிகையையொட்டி, கணு வைத்து காகம், குருவி போன்ற பறவைகளுக்கு உணவு படைக்கப்படுகிறது.சகோதரத்துவம், குடும்ப ஒற்றுமை காக்கவும், பறவைகளுக்கு உணவு அளிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் கணு பொங்கல் சிறப்புக்குரியதே. - முகுந்தன்