துள்ளிக்கிட்டு, மல்லுக்கட்டு இது நம்ம ஜல்லிக்கட்டு!
'பொங்கல்' என்றால் தமிழ்நாடு, 'ஜல்லிக்கட்டு' என்றால் மதுரை. பிரிக்கமுடியாத இந்த பாரம்பரியத்தின் பின்னணி, வீரம். பொருள் என்னவோ சொற்பம் தான்; ஆனால், அடக்கினால் கிடைக்கும் ஆனந்தத்தின் அளவு இருக்கிறதே... அதற்கு தான், அங்கே வரும் வீரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். 'முன்னால பாயுது முரட்டுக்காளை, பின்னால பாயுது மச்சக்காளை... அதையும் அடக்குது நம்ம மதுரையின் காளைகள்!'ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பது முதல், பிடிப்பது வரை நடப்பதெல்லாம் பார்த்தால், அது ஒரு தவம். சுயமரியாதை, தன்னம்பிக்கை, வீரம், பாய்ச்சல், கூர்மை, வேகம், விவேகம் என அத்தனையும் அடங்கிய ஆக்ரோஷமே ஜல்லிக்கட்டு. நம்மை நோக்கி வருவது 'ஐந்தறிவு' என்றாலும், நம்மிடமிருக்கும் 'ஆறாம்' அறிவு மட்டும் போதாது, அதை அடக்க, மேலே கூறிய அத்தனை அம்சங்களும் இருந்தால் தான், திமிலை பிடித்து, திருவிழா கூட்டத்தின் பாராட்டை பெறமுடியும். தை மாதம் வந்தாலே, 'துள்ளிக்கிட்டு, மல்லுக்கட்டு... இது நம்ம ஜல்லிக்கட்டு,' என, பரபரப்பாகும் மதுரை மண்வாசனையின் பக்கபலத்தை அறிய, இந்த பக்கத்தை பாருங்கள்!படங்கள்: செந்தில் குமார், சர்வதேச விருது பெற்ற மதுரை புகைப்படக்காரர்.