உள்ளூர் செய்திகள்

மண் கண்ட தெய்வம்!

* இது கதிரவனைவரவேற்கநட்சத்திரங்களைப்புள்ளிகளாக்கிமின்னல்களைகோடுகளாக்கிதாவணி நிலாக்கள்தரையில் கோலமிடும் தைத் திருநாள்* வீடுகளும்பொங்கலுக்குகட்டும் புத்தாடை!சுவர்களின்ஆடை தானேசுண்ணாம்பு!* மண்ணிற்கும்மனிதர்களுக்கும்நடக்குமிந்தமகரந்த சேர்க்கையில்பானைகளில்பால் பூக்கும்!* இதுகால்நடைகளைகவுரவப்படுத்தும்!உழுவதற்குமட்டுமல்லதொழுவதற்கும்என்று!* காளைகளுக்கும்பசுக்களுக்கும்கழுத்தில்பிடறி முளைக்கும்!* நம்மை வளர்ப்பதுபெண்ணில் கருப்பைமண்ணில் கலப்பைபொங்கல் உணர்த்தும்இந்த நினைப்பை!* நாம் கூடதசைகளால் ஆனதாவரங்கள் தான்!* நாமும்விதைக்கப்படுகிறோம்!விதைகளைமூடத்தான்நம் அன்னையர்மசக்கையாய்இருக்கையில்மண்ணைஉண்கிறார்கள்!* தாயின் வயிற்றில்தண்ணீருக்குள் தான்இருந்தோம்!* அங்கேவேண்டியதைஉண்டோம்வேர்கள் வழி!தோற்றத்தில்வேர்கள் தானேதொப்புள் கொடியும்!* தடவிப் பாருங்கள்நம்மிலும்தண்டுவடமுண்டு!* கனிகளுக்கும் நமக்கும்காலம் காலமாகத் தொடர்பு!* ஆப்பிளைக்கடித்ததிலிருந்து ஆரம்பமானதுவாழ்க்கை!* இயற்கைக்கும்நமக்கும்இறைவனேஉழவர்கள்!* கண்கண்ட தெய்வம்போலஅவர்கள்மண்கண்ட தெய்வம்!* தன்னைப் பிழிந்துமண்ணைநனைக்கிறவர்கள்* வயிற்றில் சுமக்கும்அன்னையைப் போலநம்மை வயலில்சுமப்பவர்கள்!* கலப்பை கொண்டுஇரைப்பை நிரப்புவர்கள்!* இயற்கையையும்உழவர்களையும்இன்றே வணங்குவோம்!கையைக் குவித்தல்லவாழ்க்கையைக்குவித்து!- கவிஞர் நெல்லை ஜெயந்தா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்