எனக்கு துணிவு பொங்கல் - மகிழ்ச்சியில் மஞ்சு வாரியர்
இனிக்கும் வெல்ல சிரிப்பில் பொங்கிடும் சர்க்கரை பொங்கல்... அதிகாலை இளஞ்சூரியனை சுண்டி இழுக்கும் மேகக்கண்கள்... தோகை கூந்தலில் ஆடும் மணக்கும் மலர் செண்டுகள்... என அழகும், ஆக் ஷனும் சங்கமிக்க 'துணிவு' பொங்கல் கொண்டாடும் நடிகை மஞ்சு வாரியார் மனம் திறக்கிறார்...இது உங்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் போல? பண்டிகைகளை பெரிய அளவு கொண்டாடியதில்லை. பண்டிகை காலங்களில் என் பிற மொழிபடங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. தமிழில் 'துணிவு' படத்தில் அஜித் உடன் நடித்ததில் பெருமை. மலையாளத்தில் 'ஆயிஷா' ரிலீஸ் ஆகுது. 'துணிவு' படத்தில் ஆக் ஷன் காட்சிகளில் நடித்தது... இயக்குனர் வினோத் போன் செய்து என் படத்தில் நடிக்கலாமான்னு' கேட்டார். உடனே ஓ.கே., சொன்னேன். இதுவரை ஆக் ஷன் படங்களில் நடிக்காததால் பயிற்சிக்கு பெற்று நடித்தேன். துப்பாக்கி பிடிக்க அஜித்தான் கற்றுக்கொடுத்தார். வினோத், அஜித் காம்பினேஷனில் நடித்ததில் சந்தோஷம். அஜித் உடன் லடாக் சென்றது, படத்தில் காதல் காட்சி...?பாக்கியமாக நினைக்கிறேன். அவர் பைக் பயணத்தை சண்டிகரில் துவங்கி மணாலி, லே, லடாக் வரும் போது தான் அவருடன் நான் இணைந்தேன். நிறைய பயண அனுபவங்களை பேசினோம். ஆக் ஷன் படம் என்பதால் காதல் காட்சிகள் இல்லை.17 ஆண்டுகளில் 40 தானா...'துணிவு' வரை நல்ல எழுத்தாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களுடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த படமான 'ஆயிஷா' சர்வதேச படம்... இலங்கை, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், அரேபிய நாடுகளில் உள்ளவர்கள், அவரவர் மொழி பேசி இதில் நடித்துள்ளனர். நான் அரபி பெண்ணாக நடிக்கிறேன். அஜித், தனுஷ் பற்றி...அஜித் எளிமையானவர். எல்லோரையும் மதிப்பவர். மனதில் பட்டதை சொல்பவர். இன்னும் நான் கீழே இறங்கி வரணும்னு அவரை பார்த்து கற்றுக்கொண்டேன். தனுஷ் கடின உழைப்பாளி. அவரிடம் உழைப்பைக் கற்றேன்.அடுத்தது அரசியலா தேர்தல் வரும் போதெல்லாம் மஞ்சு இந்த கட்சியில் இருக்கிறார், அந்த கட்சியில் சேருகிறார் என செய்தி வரும். எனக்கு அரசியல் ஆசை இல்லை.சென்னை வந்தா என்ன சாப்பிடுவீங்க...?சென்னையில் கொத்து பரோட்டா, இட்லி, தோசை, வடகறி விரும்பி சாப்பிடுவேன். இங்கு நட்பு வட்டம் குறைவு தான். நல்லது கெட்டது சொல்லி தர சில பிரண்ட்ஸ் இருக்காங்க.தினமலர் வாசகர்கள், ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்.