சூரிய பூஜை திருவிழா
சூரியனுக்குப் பரிதி என்ற பெயர் உண்டு. இந்தப் பெயருடன் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 'பரிதிநியமம்' பரிதியப்பர் கோயிலில் வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. 'நியமம்' என்றால் ஒழுங்கு, நேர்த்தி. சூரியன் மிகநேர்த்தியான பூஜை முறைகளால் சிவபெருமானை வழிபட்டதால் இத்தலத்திற்கு இப்பெயர் உண்டானது. இங்குள்ள அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம், தலம் எல்லாமே பரிதியின் பெயரால் வழங்கப்படுகிறது. பங்குனி 17, 18,19ல் சூரியபூஜை திருவிழா நடக்கிறது. பரிதியப்பரை தரிசனம் செய்தால் சூரியனைக் கண்ட பனி போல துன்பம் விலகும். பிதுர்காரகனாகிய சூரியனின் அருளால் பிதுர்தோஷம் விலகும்.