மார்ச்
தமிழகம்மார்ச் 7: தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் காலமானார்.மார்ச் 14: திண்டுக்கல் மருத்துவக் கல்லுாரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல். மார்ச் 24: நாகப்பட்டினத்தை பிரித்து 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.இந்தியாமார்ச் 1: சிவசேனா கட்சி பத்திரிகை 'சாம்னா'வின் ஆசிரியராக உத்தவ் தாக்கரே மனைவி லஷ்மி தாக்கரே நியமனம். * பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள பாதிரியார் ராபின் வடக்கும்சேரி பணியை போப் பறித்தார். மார்ச் 5: உத்தரகண்டின் கோடைகால தலைநகராக கேர்செய்ன் தேர்வு.* மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் விமானநிலையம், சத்ரபதி சாம்பாஜி மகராஜ் என பெயர் மாற்றம்.மார்ச் 6: மத்திய தகவல் தலைமை ஆணையராக பிமால் ஜுல்கா நியமனம்.* அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்குவதாக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு.மார்ச் 8: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது. மார்ச் 10: மத்திய பிரதேசத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 22 பேர் ராஜினாமா. மார்ச் 11: கர்நாடக மாநில காங்., தலைவராக சிவக்குமார் நியமனம். மார்ச் 15: கொரோனாவுக்கான சார்க் நாடுகள் நிதியம் உருவாக்கப்பட்டது.மார்ச் 20: மத்திய பிரதேசத்தில் காங்., சார்பில் முதல்வராக இருந்த கமல்நாத் ராஜினாமா. மார்ச் 24: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, வீட்டுக்காவலில் இருந்து ஏழு மாதங்களுக்குப்பின் விடுதலை. மார்ச் 26: ராஜ்யசபாவுக்கு புதிதாக 55 எம்.பி.,க்கள் தேர்வு. மார்ச் 29: 'பி.எம்.கேர்ஸ்' கொரோனா அவசரகால நிவாரண நிதியம் அறிவிப்பு.உலகம்மார்ச் 4: உக்ரைன் பிரதமராக டெனிஸ் ஷிம்கால் பொறுப்பேற்பு. மார்ச் 15: கொரோனா பரவலை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தேசிய அவரசரநிலையை அறிவித்தார். மார்ச் 21: உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்துக்கு முதலிடமும் இந்தியாவுக்கு 140வது இடமும் கிடைத்தன.மார்ச் 27: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா உறுதி. * 'நேட்டோ' அமைப்பில் 30வது நாடாக சேர்ந்தது வடக்கு மாசிடோனியா.இதுதான் 'டாப்'* மார்ச் 8: பெண்கள் தினத்தன்று பிரதமர் மோடி தன் டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை சாதனை பெண்களிடம் வழங்கினார்.* மார்ச் 19: ராஜ்யசபா நியமன எம்.பி., யாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பொறுப்பேற்பு.* மார்ச் 20 : டில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் நால்வருக்கு துாக்கு.நிறைவேறிய கனவுமார்ச் 1: ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவக்கல்லுாரி கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பங்கேற்பு.தாவிய சிந்தியாமார்ச் 15: மத்திய பிரதேச காங்., தலைவர், முன்னாள் மத்திய அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ., வில் சேர்ந்தார். இவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 22 பேரும் பா.ஜ., வில் ஐக்கியமாகினர். சிகரத்தில் சிறுமிமார்ச் 10: தென் அமெரிக்காவின் 22,841 அடி உயரமான அகோன்காகுவா சிகரத்தில் ஏறி மும்பை மாணவி காம்யா கார்த்திகேயன்(12 வயது) சாதனை.ம.பி.,யில் மாற்றம்மார்ச் 23: மத்திய பிரதேச முதல்வராக பா.ஜ. சார்பில் சிவராஜ் சிங் சவுகான் பதவியேற்பு. வீர மரணம்மார்ச் 22: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள்- சி.ஆர்.பி.எப்., மோதலில் 17 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வீர மரணம். காயமடைந்த வீரருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் புபேஷ் பகேல்.