நிலக்கரி நிறுவனத்தில் 434 மேனேஜ்மென்ட் காலியிடங்கள்
நிலக்கரி இந்தியா நிறுவனத்தில் (COAL) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'மேனஜ்மென்ட் டிரைனி' பிரிவில் கம்யூனிட்டி டெவலப்மென்ட் 20, சுற்றுச்சூழல் 28, நிதி 103, சட்டம் 18, மார்க்கெட்டிங் 25, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் 44, எச்.ஆர்., 97, செக்யூரிட்டி 31, நிலக்கரி உற்பத்தி 38 உட்பட மொத்தம் 434 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 18 - 30 (30.9.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ.1180 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 14.2.2025விவரங்களுக்கு: cdn.digialm.com