தமிழக அரசில் 615 பணியிடங்கள்
தமிழக அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது. அசிஸ்டென்ட் இன்ஜினியர் 402 (சிவில், எலக்ட்ரிக்கல், அக்ரிகல்சர், நெடுஞ்சாலை நீர்வளம், மெக்கானிக்கல் உட்பட), உதவி ஸ்தபதி 38, புள்ளியியல் கண்காணிப்பாளர் 33, ஜூனியர் பிளானர் 30, சமூகநல அதிகாரி 15, சுற்றுச்சூழல் விஞ்ஞானி 14, அசிஸ்டென்ட் மேனேஜர் 12, ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் 9 உட்பட மொத்தம் 615 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ எம்.எஸ்சி.,/எம்.பி.ஏ.,/ பி.எஸ்சி., வயது: பொது பிரிவுக்கு 32, இட ஒதுக்கீடு பிரிவுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்தேர்வுக்கட்டணம்: ரூ. 100பதிவுக்கட்டணம்: ரூ. 150கடைசிநாள்: 25.6.2025விவரங்களுக்கு: tnpsc.gov.in