சுகாதாரத்துறையில் பணியிடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை சுகாதார பணியாளர் (மக்களை தேடி மருத்துவம்) 23, சுகாதாரஆய்வாளர் 12, ஆடியோலஜிஸ்ட், பேச்சு சிகிச்சையாளர் 1, சிகிச்சை உதவியாளர் 1 என மொத்தம் 37 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட சுகாதார அலுவலர்/நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) கலெக்டர் அலுவலக வளாகம், நாமக்கல் - 637 003. தொலைபேசி: 04286 - 281424கடைசிநாள்: 4.7.2025விவரங்களுக்கு: namakkal.nic.in