ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக: வேளாண்மை பல்கலையின் பூச்சிக்கொல்லி மருந்துகள்
பயோ எல் 5ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக தாவரப்பூச்சி விரட்டிகளை அங்ககப் பூச்சி மேலாண்மையில் பயன்படுத்திடலாம். அங்கக இடுபொருளான பயோ எல் 5 கரைசலை பயன்படுத்துவதனால் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். இந்த கரைசல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இதனை பூச்சி தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்துவது அதிக பலனைத் தரும். பயிர்களில் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். இவை நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊன் உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.இக்கரைசலை ஆறு மாதங்களுக்கு சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் 10% என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதனால், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். கரைசலை ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளுடன் கலந்து உபயோகப்படுத்தக் கூடாது.பயோ ஜீ 3அங்கக இடுபொருளான பயோ ஜீ3 கரைசலை பயன்படுத்துவதனால் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். இக்கரைசலை ஆறு மாதங்களுக்கு சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். அனைத்த வகையான பயிர்களுக்கும் 5% என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதனால், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். இக்கரைசலை ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளுடன் கலந்து உபயோகப்படுத்தக் கூடாது. இந்த கரைசலின் முழு பலனை அடைய பூச்சி தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும்.