உள்ளூர் செய்திகள்

கணிசமான வருவாய்க்கு வெள்ளை நிற பலா சாகுபடி

வெள்ளை நிற பலா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை, நம்மூரில் சாகுபடி செய்யலாம். இதில், வெள்ளை நிற பலா விளை நிலத்தில் சாகுபடி செய்துள்ளேன்.மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும், வெள்ளை நிற பலா சாகுபடி செய்யலாம். இதன் வாயிலாக வீட்டு தேவைக்கு போக, கணிசமான வருவாய் ஈட்டலாம்.பலா சாகுபடி செய்யும் போது, ஒட்டு ரக மரக்கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும். அதற்கேற்ப அடியுரங்கள் மற்றும் உயிர் உரங்களை அளிக்க வேண்டும்.பலா மகசூல் எடுக்கும் போது, ஒரே காம்பில் இரண்டு, மூன்று பிஞ்சுகள் பிடிக்கும். இதில், ஒரு பலா பிஞ்சு காய்க்க அனுமதிக்கும் போது, பலாப்பழம் அதிக மகசூல் கிடைக்கும்.குறிப்பாக, வெள்ளை நிற பலாப்பழம் முழுதும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதிக சுவையுடனும் இருக்கும். பழத்தை வெட்டும் போது பிசுபிசுப்பு தன்மை குறைவாக இருக்கும்.சந்தைக்கு வரும் போது, சற்று வித்தியாசமாக இருப்பதால், அதிக பணம் கொடுத்து வாங்கவும் பொது மக்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,98419 86400.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !