கணிசமான வருவாய்க்கு: வெட்சி பூ சாகுபடி
வெட்சி பூ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தாங்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.வேணு கூறியதாவது:மணல் கலந்த களிமண் நிலத்தில், இட்லி பூ என அழைக்கப்படும் வெட்சி பூ சாகுபடி செய்துள்ளேன். இந்த பூச்செடியை, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில் சாகுபடி செய்யலாம். எல்லா சீதோஷ்ண நிலையிலும் வளரும் தன்மை கொண்டது. நான் பாத்தி முறையில் சாகுபடி செய்துள்ளேன். நல்ல மகசூல் கொடுக்கிறது. முகூர்த்தம் மற்றும் கோவில் விசேஷ நாட்களில் வெட்சி பூ நல்ல விலைக்கு விற்பனையாகிறது.இந்த வெட்சி பூ செடியை முறையாக கவாத்து செய்து, நீர் மற்றும் உரம் நிர்வாகத்தை கையாண்டால், ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எஸ்.வேணு87765 53713