நாட்டுக்கோழிக்கு காயங்களை ஆற்ற வழிமுறை
நாட்டுக்கோழிகளுக்கு காயங்களை ஆற்றுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:நெல், காய்கறி பயிர்களுக்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழிலை, விவசாயிகள் அதிகமாக செய்து வருகின்றனர்.நாட்டுக்கோழிகளை வளர்க்கும் போது, ஒரு கோழி மற்றொரு கோழியை அலகால் கொத்தி காயப்படுத்தும்.காயங்கள் பெரிதாகி விடும். கவனிக்காமல் விட்டு விட்டால், புண்ணில் சீழ் பிடித்து, கோழிகள் இறக்க நேரிடும். நாட்டுக்கோழி இனப் பெருக்கம் குறைந்து, வருவாய் இழப்பு ஏற்படுத்தும். இதை தவிர்க்க, மஞ்சள் கிழங்குடன், ஒரு பல் வெள்ளை பூண்டு அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காயங்கள் மீது தடவ வேண்டு ம். இதுதவிர, சோற்றுக்கற்றாழையுடன், மஞ்சள் துாள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது சரியாகும் வரையில் பூச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,97907 53594.