உள்ளூர் செய்திகள்

கேரளா நெல்லில் வருவாய் ஈட்டலாம்

முல்லன் கைமா ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம் நீலமங்கலத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:மணல் கலந்த செம்மண் நிலத்தில், முல்லன் கைமா பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இது, கேரள மாநிலத்தின் பாரம்பரிய ரக நெல். 140 நாட்களுக்கு பின் அறுவடைக்கு வரும். குறிப்பாக, நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நெல் மஞ்சளாகவும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.இந்த பாரம்பரிய அரிசியை பிரியாணிக்கும் பயன்படுத்தலாம். அந்தளவிற்கு நடுத்தர சன்ன ரகம். நம்மூர் மண்ணுக்கு சாகுபடி செய்யும் போது, 1 ஏக்கருக்கு 15 மூட்டைகள் மட்டுமே மகசூல் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:நீலபூ.கங்காதரன்,96551 56968


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !