உள்ளூர் செய்திகள்

சீதா பழ மரக்கிளைகள் வெட்டுவது அவசியம்

சீதாபழ சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணையைச் சேர்ந்த, முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது: சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். சீதாபழம் சாகுபடி செய்துள்ளேன். இந்த பழ மர சாகுபடியை பொருத்தவரை, காய் பிடிக்கும் போது, மரத்திற்கு தேவையான சத்து கிடைக்கவில்லை எனில், காய் மற்றும் இளம் பிஞ்சுகள் உதிர்ந்து விடும். இதை தவிர்க்க, சீதா பழ மகசூல் நிறைவு பெற்ற பின், மரத்தை கவாத்து என அழைக்கப்படும் கிளைகளை வெட்டிவிட வேண்டும். இதுபோல செய்யும்போது, அடுத்த மகசூலில் கூடுதல் எடையுடன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி. மாதவி, 97910 82317


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !