உள்ளூர் செய்திகள்

பலாப்பழத்தில் அழுகல் நோய் கட்டுப்படுத்தலாம்

பலாப்பழத்தில் அழுகல் நோய் கட்டுப்படுத்துவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:பலா மரங்கள் சாகுபடி பொறுத்தவரையில், தண்ணீர் அதிகமாக தேங்கும் இடத்தில், மரச்செடிகளை நடவு செய்யக் கூடாது. அதேபோல், காய் மகசூல் வரும் போது, நோய் தடுப்பு முறைகளை முறையாக கையாள வேண்டும். இல்லையெனில், பலா சாகுபடியில் மகசூல் மற்றும் வருவாய் ஈட்ட முடியாது. குறிப்பாக, பலாப்பழம் பூஞ்சை தாக்குதலுக்கு ஆளாகும். இந்த பூஞ்சை தாக்குதலால், பலாப்பழத்தில் அழுகல் நோய் வரும். பூஞ்சை நோய் தாக்கத்தின் துவக்கத்தில், பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். நோய் தாக்கம் தீவிரமடையும் போது, பலாப்பழங்கள் அழுகிவிடும். முதலில், பூஞ்சை நோய் தாக்கிய பலாப்பழங்களை செடியில் இருந்து அகற்ற வேண்டும். பலா மரத்திற்கு தண்ணீர் தேங்காதவாறு வடி கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். முதிர்ச்சியடைந்த பழங்களை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். இந்த பூஞ்சை தாக்குதல் தென்பட்டால், ஒரு சதவீத போர்டோக்கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு ஒரு கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா97910 15355


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்