அடர் நடவுக்கு ஏற்ற சோனியா ரக மாம்பழம்
'சோனியா' ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்து, செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை சாகுபடி செய்து வருகிறேன்.அந்த வரிசையில், மாடி தோட்டத்தில், 'சோனியா' ரக மாம்பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, வட இந்திய ரக பழம். மாடி தோட்டம் மற்றும் விளை நிலத்தில், அடர் நடவுக்கு ஏற்ற ரகமாகும்.துவக்க காலத்தில், குறைந்த எண்ணிக்கை பழங்கள் மகசூல் கொடுத்தாலும், அடுத்தடுத்து வரும் பருவங்களில், பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இந்த மாம்பழங்கள் மாறுபட்ட சுவையுடன் இருப்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு மற்றும் கணிசமான வருவாய்க்கு வழி வகுக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,98419 86400.