கொய்யா சாகுபடியில் அந்துப்பூச்சி கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு
கொய்யா சாகுபடியில் அந்துப் பூச்சியை கட்டுப்படுத்துவதற்கான கரைசல் தயாரிப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய, தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது: கொய்யா சாகுபடியில், அந்துப் பூச்சிகள் முட்டைகளை இலை, பூக்கள், காய்களின் மீது இடுகின்றன. இது, சிறிய அளவிலான புழுவாக வளர்ந்து, பழங்களை சேதப்படுத்துகிறது. சில நேரங்களில் பழுக்கும் முன், கொய்யா காய் உலர்ந்து உதிர்ந்து விடும். பல நேரங்களில் புழுக்கள் பழத்திற்குள் சென்று தாக்கும் போது, பழம் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாமல் மாறிவிடும். தாய் அந்துப்பூச்சிகளை ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி அமைத்து கட்டுப்படுத்தலாம். பேசில்லஸ் துரிஞ்சியன் மருந்தை, லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்த கரைசலை, கொய்யா மரங்களின் மீது தெளிக்கலாம். அதே மருந்தை 10 நாள் கழித்தும் தெளிக்க வேண்டும். இல்லையேல், மாலத்தியான் மருந்தை, ஏக்கருக்கு 300 மில்லி தெளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: செ.சுதாஷா, 97910 15355