மேய்ச்சல் முறையிலும் வான்கோழி வளர்க்கலாம்
வா ன்கோழி வளர்ப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி பண்ணையாளர் என்.கருணாகரன் கூறியதாவது: வான்கோழிகள் மேய்ச்சல், கூண்டு ஆகிய இரு விதமான முறையில் வளர்க்கலாம். நான் மேய்ச்சல் முறையில் வளர்த்து வருகிறேன். தற்போது, ஐந்து மாதம் நிறைவு பெற்ற வான்கோழிகள் விற்பனைக்கு உள்ளன. குறிப்பாக, பெட்டை வான்கோழிகள், ஏழு மாதங்களில் நல்ல பருமனாக. 3 கிலோ வரை எடையுடன் முட்டை இட துவங்கும். இதில், ஆண் வான்கோழிகள், பெட்டை வான் கோழிகளை காட்டிலும் அதிகமான எடை போடும். ஐந்து மாதங்களில், 6 கிலோ வரையில் எடை போடும். பத்தாவது மாதத்தில் இறைச்சிக்கு விற்கும்போது, 8 கிலோ வரை கிடைக்கும். கிலோ 400 ரூபாய் என்றாலும், ஒரு கோழியை, 3,000 ரூபாய் வரையில் விற்கலாம். ஆடு, மாடு, கோழி பண்ணைகளை பொருத்தவரையில், சந்தையில் விற்பனை செய்யும் திறனை பண்ணையாளர்கள் வளர்த்துக் கொண்டால், வான்கோழி வளர்ப்பில், கூடுதல் வருவாய் பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: - என். கருணாகரன், 79045 40678.