உள்ளூர் செய்திகள்

 மருத்துவ குணம் நிறைந்த இலுப்பை பூ சம்பா ரக நெல்

இ லுப்பை பூ சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.மணிவண்ணன் கூறியதாவது: இலுப்பை பூ சம்பா ரக நெல்லை, இயற்கை முறையில் சாகுபடி செய்துள்ளேன். இந்த ரக நெல் கருப்பு நிறத்திலும், அரிசி இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும். ஆடி மாதத்தில் துவங்கும் சம்பா பருவத்திற்கு உகந்ததாக திகழ்கிறது. ஒரு சில நேரங்களில் தட்ப வெப்பநிலையை பொருத்து, குறித்த நாட்களுக்கு முன்பே அறுவடைக்கு வர வாய்ப்பு உள்ளது. நான், இலுப்பை பூ சம்பா நெல்லை, பருவம் தவறி ஐப்பசி மாதத்தில் நட்டேன். தற்போது, 5 அடி உயரத்தில், நெற்பயிர் வளர்ந்துள்ளது. நெற்பயிர், 90 நாளில் கதிர் எடுக்க துவங்கியுள்ளது. முன் கூட்டியே அறுவடைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நெல் கதிர் எடுக்கும் போது, இலுப்பை பூவை போல வாசத்துடன் நெற்கதிர் இருக்கும். இந்த நெல்லை அரிசியாக மாற்றி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, எலும்புகள் வலுவடையும். மேலும், நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள், இலுப்பை பூ சம்பா அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால், நரம்பு தொடர்பான நோய்கள் தீரும். இந்த இலுப்பை பூ சம்பா அரிசியில் நிறைய மருத்துவ குணம் இருப்பதால், சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: - எம். மணிவண்ணன், 96558 27878.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !