நிதி சார்ந்த புதிய விதிகள் இன்று முதல் அமலாகின்றன
நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டு தொடங்கும் இன்று, வருமான வரி, பாஸ்போர்ட் கட்டணம், கிரெடிட் கார்டு உள்ளிட்ட விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. 1. வருமான வரி 2025 - 26 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31, 2026 கடைசி நாள். அதன்பிறகு தாக்கல் செய்தால் தாமத கட்டணம் செலுத்த வேண்டும். 2. ஆதார் ஆதாரில் பதிவு செய்த இ - மெயில் முகவரியை 'ஆதார் மொபைல் செயலி' வாயிலாக வரும் டிசம்பர் 31, 2026 வரை இலவசமாக புதுப்பிக்கலாம். வழக்கமாக வசூலிக்கப்படும் 75 ரூபாய் கட்டணம் கிடையாது. 3. பாஸ்போர்ட் புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பிப்பு கட்டணங்கள் உயர்வு * 36 பக்கங்கள்: ரூ.2,500 (முன்பு ரூ.1,500) * 60 பக்கங்கள்: ரூ.3,500 (முன்பு ரூ.2,000) * தட்கல் (36 பக்கங்கள்): ரூ.5,000 * தட்கல் (60 பக்கங்கள்): ரூ.6,000 4. வங்கிகள் வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லது தவறான தகவல்களுடன் நிதி திட்டங்களை விற்றால், முழு தொகையையும் திருப்பி தருவதுடன் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். விளம்பர மற்றும் மார்க்கெட்டிங் அழைப்புகளுக்கும் கடுமையான நேர கட்டுப்பாடுகள் அமல். 5. கிரெடிட் கார்டு ஹெச்.டி.எப்.சி., கிரெடிட் கார்டு விமான நிலைய இலவச லவுஞ்ச் வசதி பெற, முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் 60,000 ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே அடுத்த காலாண்டில் 3 முறை உள்நாட்டு லவுஞ்ச் வசதி கிடைக்கும். போன்பே - எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு: 'பர்ப்பிள் மற்றும் செலக்ட் பிளாக்' கார்டுகளுக்கான ரிவார்டு புள்ளிகள் விதிமுறைகள் மாற்றம். மாதாந்திர ரிவார்டு புள்ளிகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாத பரிவர்த்தனைகளின் பட்டியலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.