செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் தனிப்பட்ட கற்றல் - சென்னை ஐஐடி புதிய முயற்சி
சென்னை: தனிப்பட்ட கற்றலுக்காக செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தும் நோக்கில், சென்னை ஐஐடி மற்றும் ஸ்கேலர் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி இணைந்து புதிய கல்வி முயற்சியை தொடங்கியுள்ளது. தரவியல் மற்றும் பயன்பாடுகள் பாடத்திட்டத்தில் இவ்வமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 500 மாணவர்களுக்கு செய்முறை பரிசோதனை நடத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு கருவிகள் நேர்காணல் பயிற்சி, கோடிங் உதவி, வகுப்பு குறிப்புகள் மற்றும் பிளாஷ்கார்டுகள் மூலம் மாணவர் ஈடுபாட்டை அதிகரித்துள்ளன.ஸ்கேலரின் இணை நிறுவனர் அபிமன்யு சக்சேனா கூறுகையில், தொழில்நுட்பம் சார்ந்த கற்றலுக்கான ஐஐடி சென்னையின் நோக்கத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எஸ் எஸ் டி மாணவர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட ஏஐ கருவிகள், வகுப்பறை சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. இது இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயனளிக்கும், என்றார்.இந்த முயற்சி, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தரமான கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் CODE மையத்தின் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.முக்கிய அளவுகோல்கள்: *ஏஐ இன்டர்வியூ கம்பானியன் மூலம் 600க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் நடைபெற்றன, முக்கியமான பாடங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். *ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட் , 24 மணி நேர கோடிங் உதவியுடன், விடைத்திறன் 44% அதிகரிக்கச் செய்தது. *பிளாஷ்கார்டுகள் மற்றும் வகுப்பு குறிப்புகள், மாணவர்களில் அதிக ஈடுபாட்டையும் ஆசிரியர்களின் நேர்மறை விமர்சனங்களையும் பெற்றன. *கேமிபைட் ரிவிஷன், பயனரின் ஈடுபாட்டைக் கூட்டி, பரவலான பயன்பாட்டுக்கான சாத்தியத்தை நிரூபித்தது.