உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் கல்லூரிகளை தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்: வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கம்

மதுரை: "பாடப்பிரிவுகளைவிட தொழில்நுட்ப நிறுவன கட்டமைப்பினை பார்த்து மாணவர்கள், பெற்றோர் முன்னுரிமை அளிக்க வேண்டும்," என, சிவகாசி, மதுரையில் தினமலர் 'இன்ஜினியரிங் வழிகாட்டி' நிகழ்ச்சியில் நிபுணர்கள் வழிகாட்டினர்.அண்ணா பல்கலையின் கீழ் உள்ள அரசு, உதவிபெறும், தனியார் இன்ஜி., கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு, பி.இ., பி.டெக்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆண்டுதோறும் தொழில் நுட்பக்கல்வி இயக்ககம் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என வழிகாட்டும் வகையில் தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.நேற்று காலை சிவகாசி கம்மவார் திருமண மண்டபத்திலும், மதியம் மதுரை தல்லாகுளம் லட்சுமிசுந்தரம் ஹாலிலும் நடந்த நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கியது.விரைந்த தொழில்நுட்ப மாற்றம்நிகழ்ச்சியில், ராஜலட்சுமி குழும செயல் இயக்குனர் அபூர்வா ஹரி வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த தொழில் துறைக்கும் இப்போதிருக்கும் தொழில்நுட்பத் திறனுக்கும், தெளிவு மற்றும் நுட்பத்திற்கும் தொடர்பில்லை.தற்போதைய தொழில் நுட்பங்கள் குறுகிய காலத்தில் மாறிக் கொண்டே உள்ளன. ஒவ்வொரு வாரமும் புதிய தொழில்நுட்பங்கள் 'அப்டேட்' ஆகின்றன. ஒரு வெற்றிகரமான இன்ஜினியராக வேண்டும் என்றால் தொழில்நுட்பங்களை எப்போதுமே கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.கல்லூரிகள் எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை தரும் என்பதை அறிந்து அது தொடர்பான பாடத்திட்டங்களை நடத்த வேண்டும். தற்போதைய சூழலில் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்றால் அதிக ஆர்வம், பிரச்னைகளுக்கு விரைவான தீர்வு காண்பது, சூழ்நிலைமைகளை கையாண்டு விரைவான முடிவுகளை எடுப்பது போன்ற திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொண்டால் வெற்றிகரமான இன்ஜினியராக சாதிக்கலாம்.சரியான தேர்வு; சரியான தீர்ப்புபாலாஜி, இயக்குனர், கற்பகம் காலேஜ் ஆப் இன்ஜி.,: எந்த கல்லூரி என்ன பாடம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை தாண்டி எதற்காக இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற புரிதல் வேண்டும்.தமிழகத்தில் 530 கல்லூரிகள் உள்ளன. இதில் பாடங்களை தாண்டி நிறுவனங்களுக்கு தேவையான திறமைகளை கற்றுக் கொடுக்கும் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும்.தற்போது ஏ.ஐ., ஜென் ஏ.ஐ., டெக்னாலஜியை தாண்டி ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதற்கான உள்கட்டமைப்புகள் கல்லூரிகளில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். 'சென்டர் ஆப் எக்சிலென்ஸ்' உள்ளதா, கல்லூரிகளின் 'குவாலிட்டி ஆப் ஏர்' என்ன போன்ற விபரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.கவனமாக கையாள வேண்டும்டாக்டர் நாகராஜன், அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர், சென்னை: ஆன்லைன் கவுன்சிலிங்கில் சாய்ஸ் பில்லிங், தற்காலிக ஒதுக்கீடு, இறுதி தர ஒதுக்கீடு, கல்லூரிகளில் சேருவது என நான்கு நிலைகள் உள்ளன. கவுன்சிலிங் தொடர்பான அனைத்து விபரமும் இணையதளத்தில் உள்ளன. கல்லூரிகள் குறித்து பாடப்பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெறும்.ஜூலை 1ல் பொது, கம்ப்யூட்டர் ரேங்க் வெளியிடப்படும். அதையடுத்து சாய்ஸ் பில்லிங் வெளியிடப்படும். கடைசி 3 ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில், இத்தாண்டு கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப எந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என தெரிந்து அந்த கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மூன்று சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படும்.முதலில் கல்லூரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதில் விருப்பமான கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். மூன்றாவது நாள் மாலைக்குள் கல்லூரி பெயர், குறியீட்டு எண் பாடப்பிரிவுகளை கவனமாக தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் உதவி மையங்களை நாடலாம். சி.டி.ஏ.படம், கவுன்சிலிங் முடியும் வரை யூசர்நேம், பாஸ்வேர்ட் யாரிடமும் கொடுக்க வேண்டாம். பாதுகாப்பு மிக அவசியம்.கல்லூரிக்கு முன்னுரிமை கோரிக்கைகள்ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்: இன்ஜி., படிப்புகளை தேர்வு செய்யவுள்ள மாணவர்கள் முதலில் சோஷியல் மீடியாக்களில் பொழுது போக்குவதை கைவிட வேண்டும். கல்லூரிகள் தொடர்பாக சோஷியல் மீடியாக்களில் வரும் தகவல்களை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். பாடத்தை தாண்டி எதிர்காலத்திற்கு தேவையான திறமைகளை மாணவர் வளர்த்துக்கொள்ள வேண்டும்.அவ்வாறு வளர்த்து கொள்வது, நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்க உதவும். அனைத்து துறைகளிலும் நல்ல எதிர்காலம் உள்ளது. இரண்டாம்தர நகரங்களில் உள்ள கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிப்புகளை சேரவும்; மற்றவர்களுக்கு கம்ப்யூட்டர் இன்ஜி., படிப்புகளை தேர்வு செய்யலாம்.தற்போது தொழில்நுட்படம் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி செல்கிறது. இ.சி.இ., படிப்பவர்கள் செமிகண்டக்டர் இன்ஜி., யு.வி.எல்.எல்., எலக்ட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் டிசைன், ராணுவ தொடர்புடைய எலக்ட்ரானிக்ஸ், நானோ எலக்ட்ரானிக்ஸ் கற்றுக்கொள்ளுங்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு செய்தால் குவாண்டம் கம்ப்யூட்டிங், பிக்டேட்டா, அட்வான்ஸ் ஏ.ஐ., டுல்ஸ், லைப் கோடிங் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்தியாவில் ரயில்வேக்கு என பல்கலையுள்ளது, ரயில்வே தொடர்பான பாடப் பிரிவுகள் கற்றுத்தரப்படுகின்றன. யு.பி.எஸ்.சி.,க்கு இணையாக ரயில்வே பொறியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, கேட் தேர்வுகளுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்யுங்கள். இத்தாண்டு ஐ.ஐ.டி., டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவும் கேட் தேர்வுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது, கூகுள் ஸ்கில்ஸ் குறித்து தேடுங்கள்.அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், மெட்ரோ ரயில் திட்டங்களால் சிவில் படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது, கல்லூரிகளை தேர்வு செய்யும் போது என்.ஐ.ஆர்.எப்., நாக் போன்ற அங்கீகாரம் உள்ளதா, மல்டிபிள் லேர்னிங் ஆய்வு வசதி உள்ளதா உள்ளிட்ட கட்டமைப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்த பின் தேர்வு செய்ய வேண்டும்.சாய்ஸ் பில்லிங் முறைஜெயந்தி ரம்யா, மாணவி, மதுரை:இந்கழ்ச்சி மூலம் கவுன்சிலிங்கில் சாய்ஸ் பில்லிங் முதல் கல்லூரி தேர்வு செய்வது வரை பின்பற்ற வேண்டியவை குறித்து தெளிவாக தெரிந்து கொண்டேன். பி.இ., படிப்புகளை தாண்டி எதிர்காலத்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புள்ள பல பாடப் பிரிவுகளை தெரிய வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக கவுன்சிலிங்கின் போதும், பாஸ்வேர்ட் யாரிடமும் கொடுக்க கூடாது என்ற டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தது. நல்ல கல்லூரியாக இருந்தால் கோர் இன்ஜி., படிப்புகளை தேர்வு செய்யலாம் அறிவுரையும் பயனுள்ளதாக இருந்தது.நலம் தரும் ஆலோசனைகள்மரகதவள்ளி, பெற்றோர், மதுரை:மகனுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். கவுன்சிலிங் குறித்த நடைமுறையே தெரியாது, ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் கவுன்சிலிங்ல் பங்கேற்று பாடப்பிரிவுகளை தேர்வு செய்த திருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது. பாடப்பிரிவுகளில் இத்தனை மாற்றங்கள் உள்ளனவா என ஆச்சரியம் அடைந்துள்ளேன். இது போன்ற பயனுள்ள நிகழ்ச்சியை நடத்திய தினமலர் நாளிதழுக்கு பாராட்டுகள்.சந்தான லட்சுமி, பெற்றோர், சிவகாசி: என் மகன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்ல உள்ள நிலையில் இது குறித்து எந்த விட ஐடியாவும் இங்கு வருவதற்கு முன் எனக்கு இல்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சிக்கு வந்தேன். இதில் பேசியவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் நல்ல வழிகாட்டியாக அமைந்தது. பயனுள்ளதாக அமைந்தது. எந்த கல்லூரியில் படிப்பது, எந்த கோர்ஸ் எடுத்து படிப்பது என்பது குறித்து நானும் நன்றாக தெரிந்து கொண்டேன். கவுன்சிலிங் செல்லும் மாணவர்கள் பெற்றோருக்கும் இந்நிகழ்ச்சி பேருதவியாக இருந்தது.மாணவர்களுக்கு சிறந்த நிகழ்ச்சிஜெயபாரதி, மாணவி, திருத்தங்கல்: முதன்முறையாக கவுன்சிலிங்கை எதிர்கொள்வதால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து எந்த விபரங்களும் தெரியாமல் இருந்தேன், எதிர்கால வேலைவாய்ப்புகள் தரும் படிப்புகள், அதற்குரிய கல்லூரிகள் எது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டேன், என்னுடைய அறிவு, தனித்திறமைகளை வளர்ப்பதின் அவசியம் குறித்தும் அறிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தினமலர் நடத்திய இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு பயன் தரும் சிறந்த நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சிகளை சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லூரி, கோவை கற்பகம் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் இணைந்து வழங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்