உள்ளூர் செய்திகள்

நுழைவுத் தேர்வுகள் தான் காரணம்; குடியரசு துணை தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு செல்வது குறித்து குடியரசு துணை தலைவர் விமர்சனம் செய்ததற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வது குறித்து பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர், குழந்தைகள் சிறு வயதில் இருந்தே, வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில வேண்டும் என்று கனவு காண்கின்றனர்.2024ல் மட்டும் 1.3 மில்லியன் இந்திய மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்ன என்று மதிப்பிடப்படுகிறது. இதுவே, அவர்கள் இங்கு கல்வி பயின்றால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டனர். அதேபோல, நமது மாபெரும் முதலீடுகள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன.மாணவர்கள் கல்விக்காக வெளிநாடு செல்வது ஒருவகையான நோயாக மாறிவிட்டது, எனக் கூறியிருந்தார்.அவரது இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலுவதை புது வியாதி என்று குடியரசு துணை தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், இது பழைய வியாதி தான். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.அவர் சொல்வதைப் போல இது வியாதி எல்லாம் கிடையாது. இந்திய முறை நோயால் பாதிக்கப்பட்டதன் அறிகுறியாகத்தான் பார்க்கிறோம். க்யூட் உள்ளிட்ட தேர்வுகளின் நெருக்கடி காரணமாக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்க ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு தரமான கல்வி கிடைப்பதில்லை.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்