தினமலர் - நீட் மாதிரி நுழைவு தேர்வு முன்பதிவில் மாணவர்கள் ஆர்வம்
புதுச்சேரி : தினமலர் நாளிதழ் நடத்தும் நீட் மாதிரி தேர்விற்கு முன் பதிவு செய்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, வரும் மே மாதம் 4ம் தேதி நாடு முழுதும் நடக்கிறது. 23 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை வரும் 20ம் தேதி நடத்த உள்ளது.மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தை போக்க இந்த மாதிரி தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு உண்மையான நீட் தேர்வு போன்றே நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதன் மூலம் தன்னம்பிக்கை பெற்று, நீட் தேர்வை தயக்கமின்றி எழுதலாம்.இத்தேர்விற்கு, முன்பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதற்கான முன்பதிவு கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கியூ.ஆர்.கோடினை ஸ்கேன் செய்து முன் பதிவு செய்யலாம். மாணவர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். மாதிரி தேர்விற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. தினமலர் நாளிதழின் இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க...