உள்ளூர் செய்திகள்

கட்டாய மருத்துவ சேவை திட்டம் கைவிட போராட்டம்: மருத்துவ மாணவர்கள் முடிவு

சென்னை: "கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்தைக் கைவிடக்கோரி, 19ம் தேதி மாநிலம் முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தமிழ்நாடு மருத்துவ மாணவர்  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ்., முடிக்கும் மாணவர்கள், கட்டாயமாக ஓராண்டு காலம் தற்காலிக அடிப்படையில், கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற, திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்கான, முதுநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை விதிமுறைகளிலும் மாற்றங்களை, இந்திய மருத்துவக் கழகம் செய்துள்ளது. கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்தைக் கைவிடக்கோரி, இம்மாதம், 19ம் தேதி, மாநிலம் முழுவதும்  ஆர்ப்பாட்டம் நடத்துவது என, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சென்னையில் நடந்த பொதுக்குழுவில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்த  வேண்டிய அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து, 21ம் தேதி முடிவு செய்யப்படும் எனவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்