அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய பிரத்யூஷா கல்வி நிறுவனம்
சென்னை: பிரத்யுஷா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட், மாநில அளவிலும், திருவள்ளூர் மாவட்ட அளவிலும், முன்னணியில் தேர்ச்சிபெற்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி ஊக்குவித்தது. ஜுன் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த விழாவில், மொத்தம் 8 மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சாதனைகளுக்கான ஊக்கத்தொகையினைப் பெற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, TCS நிறுவன முதன்மை ஆலோசகர் ஏ.கே.பட்டாபிராமன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரத்யூஷா கல்வி நிறுவன தலைவர் பி.ராஜா ராவ் கூறுகையில், "மாணவர்களை ஊக்குவிப்பதும், பரிசளிப்பதும், அவர்கள், உயர்கல்வியிலும், வாழ்விலும், புதிய உச்சத்தை தொடுவதற்கு உந்துகோலாக அமையும். இந்த சிறிய பரிசு, மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது" என்றார். பரிசு வென்ற மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை தவிர, இளநிலை பட்டப் படிப்பிற்கான 4 ஆண்டு கல்விச் செலவும் ஏற்கப்பட்டது.முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டன மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவருக்கு ரூ.25 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.