உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.எம். திருச்சி - கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு

சென்னை: ஐ.ஐ.எம்., திருச்சிக்கான சொந்த புதிய வளாகத்தை கட்டும் பணி, விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, அக்கல்வி நிறுவனத்தின் டீன் கோபால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சொந்தமாக புதிய வளாகம் கட்டும் பணி, பல கட்டங்களாக நடைபெறும். அதற்கான செலவு மதிப்பீடு, ரூ.320 கோடி வரை ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைக்கு, திருச்சி ஐ.ஐ.எம்., NIT - Trichy வளாகத்தில் தற்காலிக முறையில் இயங்கி வருகிறது. நிதி ஒதுக்கீட்டிற்கு, மத்திய அரசு அனுமதியளித்து விட்டது. ஒருமுறை கட்டுமானப் பணிகள் துவங்கி விட்டால், மொத்த செலவு ரூ.500 கோடி வரை ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வளாகம் 175 ஏக்கரில் அமைந்திருக்கும் மற்றும் அந்த இடம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்