பி.இ.,- பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு துவக்கம்
காரைக்குடி: பி.இ.,- பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று(ஜுன் 19) தொடங்கியது. மூன்றாண்டு டிப்ளமோ, பி.எஸ்சி.,யில் கணிதம் படித்தவர்கள் பி.இ.,- பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இதற்கான கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை செயலாளர் மாலா தலைமையில் துவங்கியது. அவர் கூறியதாவது: அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் www.accet.in என்ற இணையதள முகவரியில், கட் ஆப் மதிப்பெண் மூலம், கலந்தாய்வு தேதி விபரத்தை தெரிந்து பங்கேற்கலாம். நேற்று காலை 9 மணிக்கு, பி.எஸ்சி., யில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்தவர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது. அதை தொடர்ந்து விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடந்தது.