உள்ளூர் செய்திகள்

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு - கவனிக்க வேண்டிய சில சாதனையாளர்கள்

ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அதில், வியக்கத்தக்க வகையில், சில மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 14 வயது சிறுவனும், செருப்புத் தைப்பவரின் மகனும்தான் அந்த சாதனையாளர்கள். 14 வயது சிறுவன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, சிவானந்த் என்ற மாணவன், தனது 14ம் வயதில் JEE Advanced தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளான். இந்த மாணவன், இந்தாண்டுதான் தனது பிளஸ் 2 படிப்பை, 93.4% மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருந்தான். இந்த மாணவனுக்கு, JEE Advanced தேர்வெழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தேர்வெழுதி, இந்திய அளவில், 2,587வது ரேங்க் பெற்றுள்ளான். இந்த மாணவனின் தந்தை ஒரு விவசாயி. இந்த மாணவனுக்கு, இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென்பது ஆசை. மேலும், தான் எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக அறியப்படவும் விரும்புகிறான். செருப்பு தைப்பவரின் மகன் பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்த, சுதிர் குமார் என்ற மாணவன், JEE Advanced தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவன். இந்த மாணவனின் தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. தந்தைக்கு உதவியாக, சுதிர் குமாரும், அந்த வேலையில் ஈடுபடுவான். சில நேரங்களில், சில மனிதர்கள், வேலை முடிந்தவுடன், கொடுக்க வேண்டிய பணத்தை தராமல், அவமதித்துவிட்டு செல்லும் அனுபவங்கள் சுதிர் குமாருக்கு உண்டு. ஆனால், அதற்கான பழிவாங்கல் கல்வியின் மூலம் சக்தி பெறுவதுதான் என்று கூறி, அவனது தந்தை, அவனை சமாதானப்படுத்தவார். இன்று அது நிஜமாகிவிட்டது. நாட்டின் மிக முக்கிய போட்டித் தேர்வுகளில் ஒன்றில், சுதிர் குமார் தேர்ச்சி பெற்று விட்டான்.இந்தாண்டு, பீகார் மாநிலத்தில், சமூகத்தின் வறிய நிலையில் இருக்கும் 27 மாணவர்கள் JEE Advanced தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், Super 30 என்ற அமைப்பை நடத்தும், சமூக சேவகர் ஆனந்த் குமாரின்(Mathematician) பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்