உள்ளூர் செய்திகள்

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: இலவச பயிற்சி பெற வாய்ப்பு

கரூர்: கரூர் மற்றும் குளித்தலை பஞ்சாயத்து யூனியன் கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது என கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கரூர் மற்றும் குளித்தலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேரிய, தவறிய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இலக்கு மக்கள் பட்டியலில் உள்ள கிராமப்புற இளைஞர்கள், மகளிர்களுக்கு இளைஞர் திறன் பயிற்சி திட்டத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி, ஜே.ஸி.பி., ஆபரேட்டர், டெக்ஸ்டெல்ஸ் மற்றும் கார்மென்ட்ஸ், டைலரிங், பேசிக் ஆட்டோமெட்டிவ் சர்வீஸிங், பேங்கிங் அசோசியேட், பாங்கிங் சேல்ஸ் ரெஃப்ரசென்டிவ் ஆகிய இரண்டு முதல் மூன்று மாத குறுகிய கால திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிவுற்றவுடன் உதவித் தொகையும், வேலை வாய்ப்பும் பெற்றுத்தரப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள இளைஞர், மகளிர்கள் இலக்கு மக்கள் பட்டியல் எண், கல்வித்தகுதி சான்றிதழ் நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகம் மற்றும் குளித்தலை, கரூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலங்களில் விண்ணப்பித்தினை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை ஜூலை 20ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04324-257377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்