உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் தேடல் குழு உறுப்பினர் நியமனம் ரத்து: பல்கலை வழக்கில் தீர்ப்பு

சென்னை: மதுரை, காமராஜ் பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான, தேடல் குழு உறுப்பினராக, டாக்டர் தங்கமுத்து நியமிக்கப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.காமராஜ் பல்கலை துணை வேந்தராக, செல்லமுத்து நியமிக்கப்பட்டிருந்ததை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, இந்திரா பானர்ஜி அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' ரத்து செய்தது. மூன்று மாதங்களுக்குள், துணை வேந்தர் பதவிக்கு, தகுதியானவர்களின் பட்டியலை தேர்வு செய்யும்படியும் உத்தரவிட்டது.இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில தினங்களில், பல்கலை சிண்டிகேட் பிரதிநிதியாக, டாக்டர் தங்கமுத்து தேர்வு செய்யப்பட்டு, தேடல் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல்கலையின் முன்னாள் மாணவர் மகாலிங்கம் தாக்கல் செய்த மனு: அவசரகதியில் சிண்டிகேட் உறுப்பினர்கள் கூடி, துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவுக்கு, சிண்டிகேட் பிரதிநிதியாக டாக்டர் தங்கமுத்துவை நியமித்துள்ளனர். கூட்டம் தொடர்பாக, உறுப்பினர்களுக்கு முறையான, &'நோட்டீஸ்&' இல்லை. பல்கலை சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் வாதாடினார். பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தேடல் குழுவுக்கு, &'செனட்&' பிரதிநிதி தேர்வில், சட்ட நடைமுறை பின்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிண்டிகேட் பிரதிநிதி தேர்வில், உரிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை; ௧௪ நாட்கள் அவகாசம் வழங்கப்படவில்லை. சிண்டிகேட் உறுப்பினர்களிடம் அழுத்தம் தரப்பட்டதற்கு, எந்த ஆதாரங்களும், கோப்புகளில் இல்லை. ஆனால், உயர் நீதிமன்றம், ௨௦௧௮ ஜூன், ௨௪ல், உத்தரவு பிறப்பித்த இரண்டு நாட்களில், சிண்டிகேட் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளை பின்பற்றி, மூன்று மாதங்களில் தேடல் குழுவை அமைக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிண்டிகேட் பிரதிநிதியை தேர்வு செய்ததில், உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. செனட் பிரதிநிதி தேர்வுக்கு, நடைமுறையை பின்பற்றி இருக்கும் போது, சிண்டிகேட் பிரதிநிதி தேர்வுக்கு, ஏன் நடைமுறையை பின்பற்றவில்லை என்பதற்கு, எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, தேடல் குழு உறுப்பினராக, சிண்டிகேட் பிரதிநிதியாக, தங்கமுத்துவை நியமித்தது ரத்து செய்யப்படுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, உரிய நடைமுறையை பின்பற்றி, தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்