உள்ளூர் செய்திகள்

மேல்நிலைக்கல்வித் தொகுதிக்கு தனி இயக்குனரகம் அவசியம்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

விருதுநகர்: "பள்ளிக் கல்வித்துறையில் மேல்நிலைக்கல்வித் தொகுதிக்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்தி, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் அறிவிக்க வேண்டும்," என, விருதுநகரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் 34 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஊதிய முரண்பாடு உள்ளது. தற்போது வெளியான காலாண்டு தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து சென்னை மாநகராட்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுப்பது நியாயமல்ல.மேல்நிலைக்கல்வி முதுகலை ஆசிரியர்களுக்கு டெட் சார்ந்த தடை இல்லாததால் அதற்கு விதிவிலக்கு பெற்று நிறுத்தி வைக்கப்பட்ட கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.மேல்நிலைக்கல்வித் தொகுதிக்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். இம்மாணவர்களிடம் நண்பராக பேச வேண்டியுள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு இணையாக உள்ளனர். தனி இயக்குனரகம் அறிவித்து ஜூனியர் கல்லுாரி அளவில் செயல்படுத்தினால், ஆசிரியர்களின் பதவி உயர்வு, பணியிடங்கள் நெறிமுறை படுத்துவது எளிதாகும்.இதில் நெறி பிறழ் நடத்தையுள்ள மாணவர்கள், வெளி நபர்களிடமிருந்து ஆசிரியர்களை பாதுகாக்கும் வரையில் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்., 25 புதுக்கோட்டை மாநிலக் கூட்டத்தில் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்