உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கேக் உடன் விஜய் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை!

பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினவிழாவில் 'கேக்' வழங்குவதுடன் முதல்வர் விஜய் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையும் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.​நவ., 14ல் கொண்டாடப்படும் இவ்விழாவில் இந்தாண்டு முதன்முறையாக மாணவர்களுக்கு 'கேக்' வழங்கப்படுகிறது. இதற்கு அரசு பத்தரை கோடி ஒதுக்கியுள்ளது. ​எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு தலா 45 கிராம் எடையுள்ள 'கேக்' நவ., 13ல் வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ​இது குறித்து அனைத்து மாவட்ட சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களிடம் இயக்குனர்கள் லதா, நரேஷ் ஆகியோர் கூகுள் மீட்டிங்கில் ஆலோசனை நடத்தினர்.அவர்கள் தெரிவித்ததாவது: ​மாணவருக்கு தலா 45 கிராம் எடையில் கிரீம் இல்லாத கேக் வழங்கப்படும். நான்கு வகை கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ​'எமிஸ்'ல் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி வாரியாக மாவட்ட விநியோக அலுவலகம் (டி.எஸ்.ஓ.,) மூலம் நவ., 10ல் சப்ளை செய்யப்படும். நவ., 13 வரை பாதுகாத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.50 நாட்கள் வரை 'கேக்' கெடாமல் இருக்கும். பள்ளிக்கு வராத மாணவருக்கு வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும். ​'கேக்' உடன் முதல்வர் விஜய் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை நடக்கிறது. புகாரின்றி இத்திட்டத்தை நிறைவேற்ற கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்