மருத்துவக் கல்விக்கு ஒரே நுழைவுத் தேர்வு - உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது. நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தக் கோரி இந்திய மருத்துவக் கவுன்சில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வரும் காலத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவ பட்டபடிப்பில் சேரும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் விதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.