சமச்சீர் கல்வி - அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட இருந்த சமச்சீர் கல்வி திட்டத்தை, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைப்பதென முடிவெடுத்து அறிவித்தது. சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு ரூ.200 கோடி செலவழித்தது. இதனை வீணடிக்கும் வகையில் தற்போதைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் எதிர்காலம் வீணாகும் வகையில் இந்த அரசு ஆணை அமைந்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு ஜுன் 8ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.