எஸ்.சி., எஸ்.டி.,யிலும் கிரீமிலேயர்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரில் வசதி படைத்தவர்களுக்கு (கிரீமிலேயர் பிரிவினருக்கு) இடஒதுக்கீட்டை படிப்படியாக விலக்கி வைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். எனினும் ஒருமித்த கருத்து அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய அரசியல் முடிவு இது என்றும் அவர் குறிப்பிட்டார். உயர் வருவாய் மூலமே மட்டுமே ஜாதி வேறுபாடுகளை முழுமையாகக் களைந்து விட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற முதல் தலித் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். 1973ல் கேரளத்தில் சிவில் ஜட்ஜாக நியமிக்கப்பட்டபோதும், மெரிட் அடிப்படையிலேயே அவருக்கு அந்தப் பணி கிடைத்து. உயர்நீதி மன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனி ஒதுக்கீடு எதுவும் இல்லை. அவரது திறமையின் அடிப்படையிலேயே அந்தப் பணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.