உள்ளூர் செய்திகள்

லேடிடோக் கல்லுாரிக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மைக்கான மாநில சிறப்பு விருது

மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மாநில சிறப்பு விருது பெற்றுள்ளது. கல்லுாரி முதல்வர் மெர்சி புஷ்பலதா கூறியதாவது: கல்லுாரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்கள் பல்வேறு ஆய்வுத் திட்டங்கள் சமர்ப்பித்துள்ளனர். கல்லுாரியின் இச்செயல்பாடுகளை அங்கீகரித்து, ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் டாக்டர் குருசாமி முதலியார் விருது கல்லுாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரம் சிறப்பு தொகையும் கிடைத்தது. மேலும், இங்கு செயல்படும் வில்காக்ஸ் சமுதாயக் கல்லுாரி பட்டயப் படிப்புகள் மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புக்களை வழங்கி வருகிறது, என்றார். தாவரவியல் துறை பேராசிரியர் குணசீலி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்