உள்ளூர் செய்திகள்

வாழ்விற்கு தேவையான ஆதாரம் தன்னம்பிக்கை: உங்களால் முடியும் நிகழ்ச்சியில் தகவல்

தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொறியியல் கலந்தாய்வை தயக்கம் இன்றி எதிர்கொள்ள வசதியாக உங்களால் முடியும் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்வி உதவித்தொகை இதில், தேர்வான 30 மாணவர்களுக்கு சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பதற்கான கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகர் வாணி மஹாலில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கு தினமலர் துணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்குனர் ஸ்ரீராம், துணை இயக்குனர் ஜானகி ராமன், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் உதவித் தொகைக்கான சான்றிதழ்களை வழங்கினர். ஏராளமான மாணவர்கள் நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பேசியதாவது: தினமலர் நாளிதழ் சமூகம் பயனடைய நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்காக ஜெயித்து காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதனால், ஏராளமான மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், பொறியியல் கலந்தாய்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. கலந்தாய்வின் போது விவரமாக இல்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். மாணவர்கள் தங்களிடம் என்னென்ன திறமைகள் உள்ளதோ அதை வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவை வளர்த்து கொள்வதன் மூலம் வேலைவாய்ப்பை எளிதில் பெற முடியும். நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். வாழ்விற்கு தேவையான ஆதாரம் தன்னம்பிக்கை. படிப்பதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது. நம்முடைய பொருளாதார நிலை நன்றாக இருந்தால் தான் சமூகத்திற்கு உதவி செய்ய முடியும். எனவே நன்கு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்ற பின், அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். சாதிக்க பிறந்துள்ளோம் ஜெயபிரகாஷ் காந்தி பேசுகையில், "மாணவர்களிடம் பயம் இருக்கக் கூடாது. நம்மை பற்றி யார் குறை கூறினாலும், நாம் அடுத்த நிலைக்கு உயர்கிறோம் என்று எண்ண வேண்டும். ஒவ்வொருவரும், சாதிக்க பிறந்துள்ளோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்