ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: மருத்துவ கல்வி இயக்ககம் எச்சரிக்கை
சென்னை: ராகிங் செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. சென்னையில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ராக்கிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறியதாவது: அரசு மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகளில் ராகிங் நடக்காத வகையில் ராகிங் தடுப்புக் குழு, கண்காணிப்புக் குழு, மாணவர் குழு என, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.