உள்ளூர் செய்திகள்

தினமலர் நடத்தும் ஜெ.இ.இ. மாதிரித் தேர்வு: மாணவர்களே வாய்ப்பை பயன்படுத்துங்கள்!

மத்திய அரசின் என்.ஐ.டி., மற்றும் நிகர்நிலை பல்கலைகள் உள்பட கல்வி நிறுவனங்களில் 40 ஆயிரம் சீட் உள்ளது. இதில் பயில ஜெ.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வு 2015 ஏப்.,4ல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் (jeemain.nic.in) மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். டிச., 18 விண்ணப்பிக்க கடைசி தேதி. ஜெ.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ் என இரு தேர்வுகளாக நடக்கும். மெயின் தேர்வுக்கு நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பிப்பர். இதில் தேர்வாகும் ஒன்றரை லட்சம் பேர் அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்பர். மெயின் தேர்வு ஆன்லைனில் சென்னையிலும்; ஆப்லைனில் மதுரை, கோவையிலும் நடக்கும். அட்வான்ஸ் தேர்வு எழுதியவர்கள் ஐ.ஐ.டி., களில் சேர வாய்ப்பு கிடைக்கும். தினமலர் தரும் வாய்ப்பு இத்தேர்வில் தயக்கமும், அச்சமும் இன்றி பங்கேற்க, தினமலர் நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் மாதிரி தேர்வு நடக்கிறது. நவ.,23ல் மதுரை கீழவெளிவீதி செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை மாதிரி தேர்வு நடக்கிறது. பங்கேற்க விரும்பும் பிளஸ் 2 ஆங்கில மீடியம் மாணவர்கள், இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை, 92449 03248 மற்றும் 92449 03249 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். போனில் பதிவெண் வழங்கப்படும். முதலில் வரும் 800 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தேர்வு எழுதி முடித்தவுடன், டைம் மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில், பிளஸ் 2 ஒரு மதிப்பெண் வினா வங்கி இலவசமாக வழங்கப்படும். சுயமதிப்பீடு செய்ய வாய்ப்பு என்பதால், இதை நழுவ விடாமல் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்