உள்ளூர் செய்திகள்

மருந்துவம் சார் படிப்புகளை அளிக்கும் பயிற்சி பள்ளிக்கு சிறப்பு அங்கீகாரம்

சென்னை: அரசு பல்நோக்கு மருத்துவமனையின், மருந்துவம் சார் படிப்புகளை அளிக்கும் பயிற்சி பள்ளிக்கு சிறப்பு அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. சென்னை, ஓமந்தூரார் தோட்டத்தில், அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோர், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, நான்கு, டிப்ளமோ படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் கொண்ட, மருத்துவம் சார் படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கு, 135 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, டிச., 1 முதல் வகுப்புகள் துவங்கி உள்ளன. தமிழகத்தில், பல்வேறு கல்லூரி, நர்சிங் கல்லூரிகளில், மருந்துவம் சார் படிப்புகள் இருந்தாலும், மருத்துவம் சார் படிப்புக்கான, பிரத்யேக பள்ளி ஏதும் இல்லை. பல்நோக்கு மருத்துவமனை பள்ளிக்கு, மருந்துவம் சார் படிப்புக்கான பயிற்சிப் பள்ளி என்ற சிறப்பு அங்கீகாரத்தை, தமிழக அரசு தந்துள்ளது. மருத்துவம் சார் படிப்புகளை, ஒரே குடையின் கீழ் பயிலும் வகையில், இந்த அங்கீகாரம் தரப்பட்டுள்ளது என, மருத்துவக் கல்வி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்