மருத்துவ பொது நுழைவுத் தேர்வு; மத்திய அரசு மனு தாக்கல்
புதுடெல்லி: மே 1ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்தது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.மேலும், தேர்வு கால அட்டவணையும் வெளியிட்டது. மே 1ம் தேதி தொடங்கவுள்ள முதற்கட்ட தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.